தொழில் & வியாபார வளர்ச்சி / உத்திகள்

தொழில், வியாபார வெற்றி பெற அறிஞர்கள், மனோத்துவ நிபுணரகளின் கருத்துக்களை இதில்தொகுத்துக் கொடுத்துள்ளேன். இவை விகாட்டியால் – ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாய் அமையும். 
அமெரிக்கத் தொழிலதிபர் கோடீஸ்வரர் ஜே. பால்கெட்டியின் கருத்துக்கள்
எந்தத் தொழிலும் ஆரம்ப காலத்தில் மந்தமாக நடப்பதும் எதிர்பாராத தடைகளில் சிக்கிக் கொள்வதும் நடக்கக் கூடியதுதான். உடனே மிரண்டு பாதையை விட்டு விலகவோ, பின்வாங்கவோ கூடாது. நல்ல முறையில் திட்டமிட்டு பலகாலம் சிந்தித்த பிறகு தொழிலை ஆரம்பத்திருக்கிறீர்கள். இது வெற்றியடைவதற்குச் சற்று தாமதம் ஏற்படலாம். உபயோகிப்போர் சற்று தாமதம் ஏற்படலாம். உபயோகிப்போர் உணர்த்தும் முயற்சியில் நீங்கள் ஈடுபடலாம். சற்று நிதானமாகத் தொழிலை நடத்தலாம். நாளாவட்டத்தில் நீங்கள் வெற்றியடைவது நிச்சயம். தடைகளும், எதிர்ப்புகளும் அவற்றை நீங்கள் மேற்கொள்ளுவதற்காகவே ஏற்படுகின்றன என்கிற எண்ணத்துடன் தீவிரமாக செயலில் இறங்கி அவற்றை எதிர்கொள்ளுங்கள். வெற்றியடைவீர்கள்.
வெற்றி பெற்றவர்கள் பின்பற்றியவ மேக்ஸ்கந்தர் கூறியது.


1. தங்கள் நண்பர்களை – மனித உறவுகளை இவர்கள் பெருக்கிக் கொண்டார்கள்.
2. இது இப்படித்தான் என்ற அறிஉப் பூர்வமான உணர்வை இவர்கள் வளர்த்துக் கொண்டார்கள்.
3. நஷ்டம் வந்தபோத வேகமாகச் செயல்பட்டு நஷ்டத்தைக் குறைத்துக் கொண்டார்கள்.இ
4. துணிச்சலாக்க் காரியம் செய்தார்கள்.
5. நடக்காமல் போனாலும் போகலாம் என்ற சந்தேகமும், பயமும் இவர்களிடையே இருந்தது அதற்கேற்ப இவர்கள் திட்டம் தீட்டிக் கொண்டார்கள்.
அவரது இந்த ஐந்து அனுமானங்களையும் பற்றி நிதானமாக யோசித்துப் பாருங்கள்.
பலகாலம் பல செல்வந்தர்களையும் பல தொழிலதிபர்களையும் பேட்டி கண்டு ஆராய்ந்து டாக்டர். சுருளி பிளாட்நிக் என்ற மனோத்துவப் பேராசிரியர் எழுதுகிறார்.
(i) இவர்கள் மனதுக்குள் ஒரு பொறி இருக்கிறது. மனதிலே ஒரு கோட்டை அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அதில் எண்ணத்தைப் போட்டுவுடன், பல படிகளையும், சந்து பொந்துகளையும் தாண்டிச் செல்லும் எலி, உணவை அடைவது போல அர்கள் மனம் செயல்படுகிறது. அப்படி ஒரு வெற்றி வியூகம் அங்கே செயல்படுகிறது. பழைய தோல்வி அனுபவம் – நிறைவு – புதிய பிரச்சனையையும் அதே தோல்விப் பாதையில் இறக்கிவிடுகிறது, பட்ட காலிலே படும் என்பது போல. ஆகவே நாம் ஏன் நம் வெற்றி அனுபவங்களை அதிகம் நினைத்துச் செயல்படக் கூடாது?
(ii) இவர்கள் எதையும் வெளியில் சொல்வதில்லை, விவாதிப்பதில்லை, விவாதித்தால் ஏதோ ஏணியில் ஏறும்போது கைப்பிடியை இழுத்து விடுதுபோல் எண்ணுகின்றனர்.
(iii) எதை ஆரம்பித்தார்களோ அதிலேயே ஊடாடிக் கொண்டு இருக்கிறார்கள். தடம் மாறுவதில்லை. அக்கரைப்பச்சை என்று ஓடுவதில்லை. மாறினால் அவர்கள் செய்து வந்த தொழில் சம்பந்தப்ட்ட மற்றொரு தொழிலில் தான் இறங்குகிறார்கள். தேங்காய் வியாபாரம் செய்பவர் மட்டை, நார், கயிறு, மிதியடி என்ற அது சம்பந்தமான தொழிலில் இறங்குவதுபோல், ஓர் எழுத்தாளர் சிறுகதை நாடகம், சினிமா என்று இறங்குவது போல், அதாவது அவர்கள் தங்களுக்குத் தெரியத தொழிலில் திடீரென்று இறங்கி ஆழம் பார்ப்பதில்லை. என்னிடம் திறமை இருக்கிறது. எந்தத் தொழிலும் வெற்றியடைவேன் என்ற ஆணவம் ஆட்டுவிப்பதில்லை.
(iv) தொழில் செய்பவர்கள் அதிலேயே ஆழ்ந்து செய்வதில் திருப்தி காண்கிறார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்று ஒரு வழிபாட்டு உள்ளத்துடன் அதில் ஈடுபடுகிறார்கள்

1 comment:

  1. I am b com graduate,I bhysicaly handicapped Person I need brand for garments &hosiries I need help

    ReplyDelete