GST

‘ஜி.எஸ்.டி - வரி தாக்கல் செய்வது எப்படி :


நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி ஒரே நாடு ஒரே வரி என்று சொல்லப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் பலர் தெரிவித்துள்ளனர். எனினும் இனிமேல் யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஜி.எஸ்.டி வரியைத் தாக்கல் செய்தே ஆக வேண்டும். 

ஆனால், ஜி.எஸ்.டி வரியைத் தாக்கல் செய்வது எப்படி; எந்த வரி படிவம் எதற்கு என்ற விவரம் பெரும்பாலோனோருக்கு தெரியாமலேயே இருக்கிறது. 
"ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்ய வேண்டும். ரூ.20 லட்சத்துக்குக் கீழே வியாபாரம் செய்பவர்களும், விருப்பப்பட்டால் ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்யலாம். ஆனால், ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்த ஒவ்வொருவரும் அவர்களுடைய விற்பனை மற்றும் கொள்முதல் பற்றிய விவரங்களை மாதாமாதம் உரியத் தேதியில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்குத் தேவையான படிவங்களைக் கீழே விரிவாகப் பார்ப்போம். 
ஜி.எஸ்.டி - படிவம் தாக்கல் செய்தல் - Return of Filing 
1. GSTR - 1 : விற்பனைத் தகவலுக்கான படிவம் 
ஒவ்வொரு மாதம் முடிந்த பின்னும், வரும் மாதத்தின் 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவற்றில் கீழ்க்கண்ட தகவல்களைக் கொடுக்க வேண்டும். 
அ) முதலில் பதிவு பெற்ற நபர்களுக்குச் செய்த விற்பனையைப் பற்றிய விவரங்களைக் கொடுக்க வேண்டும். வாங்குபவர்களின் பெயர், ஜி.எஸ்.டி பதிவு எண், Invoice தேதி, Invoice எண், விற்பனைத் தொகை, வரி போன்ற தகவல்களைக் கொடுக்க வேண்டும். 
ஆ) ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்யாத நபர்களுக்கு விற்பனை செய்யும் பொழுது மாதம் முழுவதும் செய்த விற்பனையை மாநில வாரியாகக் கொடுக்க வேண்டும். வாங்குபவரைப் பற்றிய தகவல்களைக் கொடுக்க தேவையில்லை. ஆனால், பதிவு செய்யாத வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.2,50,000-க்கு மேல் விற்பனை செய்தால் அவரைப் பற்றிய விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். 
இ) ஏற்றுமதி விற்பனை பற்றிய விவரங்களைக் கொடுக்க வேண்டும். 
ஈ) வரி இல்லாத பொருள்கள் பற்றிய விற்பனை குறித்த தகவல்களைக் கொடுக்கும் பொழுது பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத உள்மாநில மற்றும் வெளிமாநில வாரியாகக் கொடுக்க வேண்டும். 
உ) பற்றுக்குறிப்பு (Debit note) வரவுக்குறிப்பு (Credit note) பற்றிய முழு விவரங்களையும் கொடுக்க வேண்டும். 
ஊ) மிக முக்கியமாக, வியாபாரத்தில் முன் பணம் பெறும் பொழுது, வரியுடன் சேர்த்தே பெற வேண்டும். அவ்வாறு பெறும் வரியை இறுதியாக, விற்பனை செய்யும் பொழுது Adjust செய்து கொள்ளலாம். 
2) GSTR - 2 : கொள்முதல் தகவலுக்கான படிவம் 
இந்தப் படிவத்தை மாதம் முடிந்த பின் 11-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். 
அ) ஒவ்வொரு கொள்முதலும் பதிவு செய்த விற்பனையாளர்களிடம் பெற்று இருந்தால், அவர்கள் அவர்களுடைய மாதாந்திர GSTR -1 -ல், நமக்கு விற்பனை செய்த தகவல்களையும் தாக்கல் செய்து இருப்பார்கள். எனவே நாம், பதிவு பெற்ற விற்பனையாளர்களிடம் இருந்து பெற்ற கொள்முதல் அனைத்தும் நம்முடைய GSTR -2-ல் இருக்கிறதா எனச் சரிபார்த்துக் கொள்ளலாம். ஏதேனும் விடுபட்டு இருந்தால் நாம் அதை மட்டும் பதிய வேண்டும். 
ஆ) பதிவு செய்யாத விற்பனையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து இருந்தால் அவற்றை நாம் GSTR-2-ல் பதிவு செய்ய வேண்டும். 
இ) இறக்குமதி கொள்முதல்களையும் பதிய வேண்டும். 
ஈ) பற்றுக்குறிப்பு (Debt note) வரவுக்குறிப்பு (Credit note) குறித்த முழு விவரங்களையும் பதிய வேண்டும். 
உ) முன் பணம் செலுத்தும் போது வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். அதைப் பற்றிய விவரங்களையும் பதிய வேண்டும். 
ஊ) GSTR-1 மற்றும் GSTR-2-l-ல் ஏதேனும் mismatch இருந்தால், notification வரும். அதை நாம் சரி செய்யலாம். 
3. GSTR-3 : மாதாந்திர இறுதிப் படிவம் 
அ) இந்தப் படிவத்தில் GSTR-1-ல் உள்ள மொத்த விற்பனையும், GSTR-2-ல் உள்ள மொத்த கொள்முதலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும். 
ஆ) Input tax credit-ல் Adjust செய்தது போக மீதி வரி மற்றும் வட்டி ஏதேனும் செலுத்த வேண்டும். 
இ) இப்படிவத்தை வரும் மாதத்தின் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். 
4) GSTR - 9 : வருடாந்திர படிவம் 
இது வருடாந்தர விவரங்களைத் தாக்கல் செய்யும் படிவம். அடுத்த நிதி ஆண்டின் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். 
5) GSTR-4 : தொகுப்பு வரி விதிப்பு முறை (Composition Scheme) 
75 லட்சம் ரூபாய் வரை டர்ன் ஓவர் செய்பவர்கள் தொகுப்பு வரி விதிப்பு முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிவத்தைக் காலாண்டு முடிந்த உடன் வரும் மாதத்தின் 18-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். 
இதில் GSTR-1, GSTR-2, GSTR-3, GSTR-9 மற்றும் GSTR-4 மட்டுமே எல்லோராலும் பெரிதும் பயன்படுத்தப்படக்கூடியது. இதுதான் பெரும்பாலும் 80% முதல் 90% வரையிலானவர்களுக்கு பொருந்தக்கூடியது. மற்றவையெல்லாம், வெளிநாட்டினர், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது. உதாரணத்துக்கு GSTR-5 என்பது வெளிநாட்டில் வசித்து வரும் இந்திய குடிமகன்களுக்கான படிவம்; GSTR-6 என்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லது ஒரே இடத்தில் தலைமையகத்தை வைத்துக்கொண்டு 10, 20 இடங்களில் பிசினஸ் செய்து வரும் நிறுவனத்துக்கான படிவம்; GSTR-7 என்பது இ-காமர்ஸ்-கான படிவம்....

No comments:

Post a Comment