சட்டம் அறிவோம்






நீதிமன்றத்தில் ப்ரைவேட் கம்ப்ளைண்ட் கொடுப்பது எப்படி?



     ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தின் வழக்கு தாக்கல் செய்யும் முன் அந்த வழக்கில் நியாம் இருக்கிறது என்று நீதிமன்றம் நம்பும் வகையில் இருக்க வேண்டும்.

     ஒரு குற்றம் எங்கு நடந்துள்ளதோ அந்தக் குற்றவியல் மன்றத்தில்தான் புகார் செய்ய முடியும்.

     எனவே. குற்றம் எந்த எல்லைக்குள் நடந்துள்ளதோ அங்கு வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

     குற்றவியல் நீதிமன்றங்கள் பல உள்ளன. ஓரே ஊரில் முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் மன்றம் என்றும். இரண்டாவது வகுப்பு நீதித்துறை நடுவர் மன்றம் என்றும் கூட இருக்கலாம். குற்ற அளவின் தன்மையைப் பொருத்து எங்கே புகார் செய்வது என்று முடிவு செய்ய வேண்டும்.

     தவறான நீதிமன்றத்தில் மனு கொடுத்தாலும் அதனால் பெரிய தவறு ஒன்றும் இல்லை. மனு மறுக்கப்பட்டு திருப்பியளிக்கப்படும். ஒரே நேரத்தில் ஏன் திருத்தப்பட்டது என்பதற்கான காரணம் எழுதப்பட்டிருக்கும் அதைத் தெரிந்து கொண்டு உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.

     மனு தயார் செய்யும் போது தலைப்பில் நீதித்துறை நடுவர் மன்றம் என மனு எழுதி அதன் கீழே ஊரின் பெயரை எழுத வேண்டும். அதற்குக் கீழே மையத்தில் ஆண்டடுப்பட்டிகை வழக்கு எண் அல்லது சி.சி.எண்.. என்று எழுதி கொஞ்சம் இடம் விட்டு அதாவது சி.சி. எண்…….2006 என்று வருடத்தைக் குறிப்பிட வேண்டும். வழக்கு பதிவு செய்யப்பட்டதும் ஒரு எண்....... வழங்கப்படும். அந்த எண்ணை எழுதுவதற்கு வசதியாகவே இந்த இடைவெளி விடப்பட்டுள்ளது.

     அடுத்து பெயர் தந்தையார் பெயர்- சுமாரான வயது முகவரியை இடது பக்கத்தில் எழுதி. மனுதாரர் குற்றப்புகார் என்று எழுத வேண்டும். அதற்குக் கீழே தமிழில் எழுதுவதாக இருந்தால் தன் வழக்கில் தானே ஆஜராகிறார் என்று எழுத வேண்டும். அல்லது ஆங்கிலத்தில் Party in Person என்று எழுதவேண்டும். இது எழுதப் படாவிட்டாலும் பரவாயில்லை.

     எழுதப்பட்டிருந்தால் மனுதாரர் வழக்கறிஞர் இல்லாமல் வாதாடப் போகிறார் என்பதை நீதிமன்றம் முதலிலேயே புரிந்து கொள்ளும்.

     அடுத்து இடது பக்கத்தில் எதிர்மனுதாரர்களின் பெயர்- சுமாரன வயது முகவரி எழுதவேண்டும். எதிர்மனுதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தால் வரிசையாக எழுத வேண்டும். எழுதி வலது பக்கத்தில் எதிர்மனுதாரர்கள் என்று குறிப்பிடவேண்டும்.

     குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்ய கட்டணமாக 2 ரூபாய்க்குக் கோர்ட் பீ ஸ்டாம்ப் வாங்கி ஓரத்தில் ஓட்டிவிடவேண்டும். இந்த ஸ்டாம்ப் ஒட்டுவதற்கு வசதியாக இடது பக்கம் மார்ஜினில் இடம்விட்டு மனு தயார் செய்ய வேண்டும். இந்த ஸ்டாம்ப் இடது பக்கத்தில்தான் ஒட்ட வேண்டும். என்பதில்லை தலைப்பிலோ வலது பக்கத்திலோ கீழே உள்ள மார்ஜின் பகுதியிலோ எங்கு வேண்டுமானாலும் ஒட்டலாம்.

     குற்றத்துறை நடுவர் நதீமன்றத்தில் இதுபோல் தனியார் புகார் கொடுப்பதற்கு குற்ற விசாரணை முறைச் சட்டம் 200-ல் குறிப்படப்பட்டு உள்ளது. எனவே கீழே மையத்தில் கு.வி.மு 200 இன் கீழ் மனு என்று குறிப்பிட்டு அடிக்கோடு இடவேண்டும்.

     ஒரு குற்றம் பற்றி சரியாகப் புலனாகாத நிலையில் கு.வி.மு.ச 190(1)(அ)-ன் கீழும் இந்த மனுவை ஒரு முறையீட்டாக தாக்கல் செய்யலாம்.

     பொது சுகாதாரக் கேடுகள். பொது வழிக்கு இடையூறு ஏற்படுத்துதல் அமைதியைக் குலைத்தல் போன்ற பொது நல வழக்காக இருந்தால் கு.வி.மு.ச. 133-ன் கீழ் முறையீடு என்று குறிப்பிடடு தாக்கல் செய்யலாம்.

     புகாராக இல்லாமல் ஒரு சம்பவம் பற்றி நமக்குச் சம்பந்தம் இல்லாத பிரச்சனைகள் பற்றி தாக்கல் செய்வதாக இருந்தால் கு.வி.மு.ச. 2(ஈ) யின் கீழ் முறையீடு என்று குறிப்பிடவேண்டும். இந்தப் பிரிவின் கீழ் அரசு அதிகாரிகள்மீதும் முறையீடு தரலாம். கு.வி.மு.ச. 197-ன் கீழ் அரசிடம் அனுமதி பெறத் தேவை இல்லை. உதாரணமாக தாசில்தாரர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது போன்ற மேல் முறையீட்டையும் தரலாம்.

     அடுத்து புகாரின் தன்மையைச் சுருக்கமாகப் பாரா பாராவாக எழுத வேண்டும். 1.2.3 என பத்திகளுக்கு வரிசை எண் குறிப்பிடுவது நல்லது.

     கடைசியில் எனவே எதிர்மனுதார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் பிரார்த்திக்கப்படுகிறது என்று முடிக்க வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் எந்தப் பிரிவில் (SECTION) இந்தக் குற்றம் அடங்கும் என்ற விபரம் தெரிவிக்கலாம். தெரிவிக்காமலும் விட்டுவிடலாம். தெரிவித்தால் மனுதார் சட்டம் படிக்கிறார் என்ற விபரத்தை நடுவர் புரிந்து கொண்டு நியாயமாக விசாரரணயை நடத்த எண்ணுவார்.

     அய்யா வணக்கம் என்று சாதாரண கடிதத்தில் எழுதுவது போல எந்த இடத்திலும் எழுதத் தேவையில்லை.

     கடைசியில் வலது பக்கம் கையெழுத்து செய்து மனுதார் என்று எழுத வேண்டும்.

     புகாரை இரண்டு பக்கமும் எழுதலாம். புகார் எழுதும் போது இரண்டு கார்பன் பேப்பர் வைத்து எழுதி அடிக்கட்டையைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது ஜெராக்ஸ் எடுத்தும் கொள்ளலாம். எதிர்மனுதாரர்க்காக ஒரு நகல் வழங்கவேண்டும் என்பதால் ஒரிஜினல் மனுவுடன் ஒரு நகலும் சேர்த்துக் வைக்க வேண்டும்.

     பொதுவாக வழக்கு தாக்கல் செய்யப்படும்போது டைப் செய்து தாக்கல் செய்வதே நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் டைப் செய்துதான் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டத்தில் தெரிவிக்கப் படவில்லை. இது சிவில் நீதிமன்றங்களுக்கு மட்டுமே பொருந்தும். 

     கு.வி.மு.ச. 2(ஈ)யின் கீழ் வாயினால்கூட முறையீட்டை தாக்கல் செய்யலாம் என்பதே விதி. எனவே. எழுதப்படிக்கத் தெரியாதவர்களும் வசதி இல்லாதவர்களும் நீதிமன்றத்தில் சென்று வாயினாலேயே தங்கள் முறையீட்டை அளிக்கமுடியும்.

     புகார் மனுவை டைப் செய்யும்போது இரண்டு பிரதி தயார் செய்ய வேண்டும். முதல் பிரதி ஒரிஜினல் புளு திக் பேப்பரிலும் (கேங்கர் பேப்பர்) இரண்டாவது மூன்றாவது பிரதி வெள்ளைப் பேப்பரிலும் இருக்கலாம். முதல் இரண்டு பிரதிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். கம்ப்யூட்ரில் டைப் செய்தால் ஜெராக்ஸ் எடுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

     புகார் மனுவானது வழக்கு முடியும் வரையில் பாதுகாப்பட வேண்டியுள்ளதால் இது போல் திக் பேப்பரில் இருந்தால் பாதுகாப்பாகவே இருக்கும் என்பதால் இதை நடைமுறையில் பின்பற்றுவதாகத் தெரிகிறது.

     ஒரு பிரதியை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். மனுவில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை நினைவு படுத்திக் கொள்வதற்காக இது தேவைப்படும். வழக்கு விசாரணையில் எதிர் மனுதாரர் பலர் இருந்தால் இதன் நகல் தரவேண்டியிருக்கும். இதை அப்படியே ஜெராக்ஸ் எடுத்தோ. மீண்டும் தட்டச்சு செய்தோ வழங்கலாம்.

     மனுவை இரண்டாக மடித்தால் பின்பக்கம் வெறுமனே இருக்கும். பாதியாக மடித்து அதன் வலப்பக்கத்தில் மேலே நீதிமன்றத்தின் பெயரும். ஊரின் பெயரும் கீழே எழுத வேண்டும். அதற்கடுத்து (C.C.No…./2017) என்று எழுதவேண்டும். இது காலண்டர் கேஸ் எண். (CALENDER CASE NUMBER) என்பதன் சுருக்கமாகும். தமிழில் ஆண்டுப்பட்டிகை வழக்கு எண்……../2017 என்றும் குறிப்பிடலாம்.
சற்று கீழே மனுதாரின் பெயர் எழுதி-மனுதார் என்று எழுத வேண்டும். அதற்குக் கீழ் கொஞ்சம் இடம்விட்டு எதிர்மனுதாரின் எதிர்மனுதாரர்கள் பலர் இருந்தால் முதல் எதிர் மனுதாரின் பெயரைமட்டும் எழுதி மற்றும் பிறர் என்று குறிப்பிட்டால் போதுமானது.

     மையப்பகுதியில் குற்றவிசாரணை முறைச்சட்டம் அல்லது கு.வி.மு.ச. 200கீழ் மனு என்று குறிப்பிட்டு மேலும் கீழும் கோடிட்டுத் தனியாகக் காட்ட வேண்டும். அல்லது நீங்கள் எந்தப் பிரிவின் கீழ் உள்ளே குறிப்பிட்டுள்ளீர்களோ அதை இங்கே குறிப்பிட வேண்டும்.

     கடைசியில் மனுதாரின் பெயரை எழுதி மனுதார்- தன் வழக்கில் தானே ஆஜராகிறார் என்று எழுத வேண்டும்.

     இதுவே தயாரிக்கப்பட்ட மனுவாகும். இந்த மனுவுடன் உரிய சான்றாவணங்கள் இருந்தால் கூடிய மட்டும் ஒரிஜினலோ அல்லது ஜெராக்ஸ் காபியோ இணைக்க வேண்டும்.




சட்டம் அறிவோம்
இந்திய தண்டனை சட்டம் (INDIAN PENAL CODE)
தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை -பிரிவு 96
மத உணர்வுகளை புண்படுத்துதல். - 1 வருடம் சிறை -பிரிவு 295
ஆள்மாராட்டம்- 3 ஆண்டு சிறை -பிரிவு  419
கணவன்/மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம்- 7 வருடம் சிறை -பிரிவு 494
திருமணம் ஆனதை மறைத்தல்- 10வருட சிறை -பிரிவு 495




தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிவோம்



தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பெரும்பாலான தமிழக மக்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். ஆனாலும் அந்தச் சட்டத்தால் என்ன பயன் என்றும் அந்தச் சட்டத்தை எப்படி பயன்படுத்துவது என்றும் நமது சிறகுவாசகர்களுக்காக வழக்கறிஞர் திரு. கிறிஸ்டோபர் அவர்கள் விளக்கம் அளித்தார். அவ்விளக்கம்:
அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக் கூடைகளுக்குச் கூட செல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு பொதுமக்கள் கேட்கும் தகவலைத் தர மறுத்தால் அரசு ஊழியர் சட்டத்தை மீறியவராகக் கருதப்படுவார். அவருக்கு தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.
இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் அறிய விரும்பும் தகவலைப் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.
விண்ணப்ப மனு ஒரு வெள்ளைத் தாளில் கைகளால் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம் அல்லது தட்டச்சு செய்து கொள்ளலாம். மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற வில்லையை ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாகக் கொடுக்க வேண்டும். இந்த நீதிமன்ற வில்லைகள், முத்திரைத்தாள் முகவர்களிடம் கிடைக்கும். நீதிமன்ற வளாகங்களிலும் கிடைக்கும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத் தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்னென்ன தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியவைகள் இடம் பெற வேண்டும்.
மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்க வேண்டும். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும். மனுக்களை நேரிலோ அல்லது பதிவுத் தபாலிலோ அனுப்பலாம். தூதஞ்சல் (courier) மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு நகல் எடுத்து வைத்துக் கொண்டு அனுப்பிய பிறகு அஞ்சல் முத்திரையுடன் கூடிய ஆதாரச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.
வெளி நாடுகளில் வாழ்வோர் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக் கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களில் அதற்குண்டான முத்திரைக் கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.
பொதுத் தகவல் தொடர்பு அதிகாரியிடமிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசத்தில் கிடைக்க வேண்டும். தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்தில் கிடைக்க வேண்டும். ஒரு நபரின் உயிர்ப் பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி தகவல் நேரத்தில் தர வேண்டும்.
நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்து கொள்ளலாம். உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்த வேண்டும்.
சாமானிய மக்கள் தாங்கள் அறிய விரும்பும் தகவல்களை உடனே தெரிந்துகொள்ள கொண்டுவரப்பட்டதே இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தின் மூலம் மக்கள் ஆட்சியின் மகத்துவம் உணர்த்தப்படுகிறது. நீங்கள் கேட்கும் தகவலைத் தர கடமைப்பட்டுள்ள அதிகாரிகள் உரிய பதிலைத் தர மறுத்தால் அவர் மீது வழக்குத் தொடுக்கலாம். இந்தச் சட்டத்தின் வழி பொதுமக்களுக்கு பல தகவல்களைப் பெற்றுத் தர தொண்டு நிறுவனங்கள் களப் பணி ஆற்றிவருகின்றன. இவைகளின் மூலமும் நாம் அறிய விரும்பும் தகவலைப் பெறலாம். எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி பலன் பெறுவோம்.

வழக்கறிஞர் உதவி இல்லாமல் தனி புகார் வழக்கு வெற்றிகரமாக நடத்த வழி



வழக்கறிஞர் உதவி இல்லாமல் தனி புகார் வழக்கு வெற்றிகரமாக நடத்த வழி
வழக்கறிஞர் உதவி இல்லாமல் தனி புகார் க்கு வெற்றிகரமாக நடத்த வழி


காவல்
நிலையத்தில் கொடுத்த புகார் மனு மீது காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் (வழக்கு) பதிவு செய்ய மறுத்தால் நீதிமன்றத்தை அனுகி எப்.ஐ.ஆர் (வழக்கு) பதிவு செய்யலாம். நீதிமன்றத்தில் காவல் துறை மூலம் அல்லாமல் பாதிகப்பட்டவரே நேரடியாக தாக்கல் செய்யும் புகார் மனுவை தனி முறையீட்டு மனு அல்லது தனி முறையீட்டு வழக்கு என்பார்கள்

பாதிக்கப்பட்ட நபர் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாக புகார் மனுவை உரிய காவல் நிலையத்தில் கொடுத்து (எப்.ஐ.ஆர்) வழக்கு பதிய சொல்லி வலியுறுத்தலாம்

வழக்கினை பதிவு செய்ய (வழக்கினை விசாரனைக்கு ஏற்க) மறுத்தால் அல்லது காலம் தாழ்த்தினால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (அ) காவல் ஆணையளாரிடம் குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 154 (3) -ல் புகார் மனுவை எழுத்து மூலமாக கொடுக்க வேண்டும்

பிறகு உரிய குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 200-ல் தனி புகார் ஒன்றினை கொடுத்து குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 156 (3) படி எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்திரவு பெறலாம்.

அல்லது நேரடியாக உயர் நீதிமன்றத்தையும் அனுகி எப்.ஐ.ஆர் போட உத்திரவும் பெறலாம்

நீதிமன்ற உத்திரவுக்கு பிறகு வேறு வழியில்லாமல் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்வார்கள் எப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு காவல் துறையினர் விசாரனை செய்து வழக்கில் போதுமான ஆதாரம் இருப்பின் குற்றபத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்

பிரிவு 200-ல் நீதிமன்றமே நேரடியாக வழக்கினை விசாரனை செய்யும் வழி முறை உள்ளது.  அதை பிறகு தனியாக பார்ப்போம்
பொதுவாக பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையிடம் தான் கொடுக்கும் மனுவை புகார் மனு என்று நினைக்கின்றோம் ஆனால் சட்டபடி காவல் துறைக்கு பாதிக்கப்பட்ட நபர் கொடுக்கும்தகவல் தான் அது முதலில் கிடைக்கும் தகவலை காவல் துறை முதல் தகவல் அறிக்கையாக (எப்.ஐ.ஆர்) பதிவு செய்து கொண்டு வழக்கினை புலன் விசாரனைக்கு எடுத்துக் கொள்கின்றார்கள் எந்த ஒரு வழக்கிற்கும் அடிப்படை முதல் ஆவணம் இந்த முதல் தகவல் (புகார்) என்ற வகையில் குற்றவாளையை தண்டிக்க மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

குற்ற நிகழ்வால் பாதிக்கப்பட்ட நபர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பினை பற்றி வாய்மொழியாக அல்லது எழுத்து மூலமாக புகாரை காவல் நிலையத்தில் கொடுக்கலாம் வாய்மொழியாக கொடுத்தால் அதை காவல்துறையினர் எழுத்து மூலமாக எழுதி பதிவுசெய்து படித்துக்காட்டி விளக்குவார்கள் ??? (பிரிவு 154 (1) சிஆர்பிசி) வாய்மொழியாந புகாரை பதிவு செய்துக் கொண்டு அல்லது எழுத்து மூலமான புகாராக இருப்பின் பெற்றுக் கொண்டு கைது செய்ய கூடிய குற்ற செயல் நடைபெற்றதாக அதில் கண்டால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வார்கள். கைது செய்ய கூடிய குற்ற செயல் அல்லாத குற்றம் என்றால் மனு இரசீது (சிஎஸ்ஆர்) (பிரிவு 155 (1) சிஆர்பிசி)வழங்குவார்கள்

புகார் மனுவில் என்ன என்ன விபரங்கள் இருக்க வேண்டும் மாதிரியுடன் தனிப்பதிவில்


புகார் மனுவில் புகார் கொடுப்பவர் பெயர் தகப்பனார் பெயர் வயது முழு முகவரி செல் எண் உள்ளிட்ட முழு விபரம் அனுப்புநர் பகுதியில் எழுத வேண்டும் 

பெறுதல் பகுதியில் அந்த காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் யார் பொறுப்போ அவர் பதவியிட்டு குறிப்பிட வேண்டும் அவரின் பெயரை குறிப்பிட கூடாது 

அடுத்த புகார் மனுவில் முன்னுரை சுருக்கமாக குற்ற செயலுக்கும் முன்பாக (மோடிவ்) உங்களுக்கும் எதிர் தரப்புக்கும் உள்ள உறவு பற்றி சுறுக்கமாக குறிப்பிடலாம்
அடுத்து குற்றம் நடைபெற்ற தேதி நேரம் இடம் தெளிவாக குறிப்பிட்டு குற்ற சம்பத்தை விரிவாக நடந்ததை அப்படியே எழுத்தில் விவரிக்க வேண்டும்

சம்பவத்தை பற்றி விவரிக்கும் போது அந்த குற்ற சம்பவத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை குற்ற பிரிவு வரும் விசயங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும் 
எடுத்துக்காட்டு 
என்னை தடுத்து நிறுத்தி ..... (இதச பிரிவு 341)
கொச்சையாக திட்டினார் ..... (இதச பிரிவு 294 பி)
வார்த்தையை அப்படியே பச்சையாக சொன்னது சொல்லியபடி எழுத வேண்டும்

ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கியத்துவம், பலம், பலவீணம் இருக்கும் அதை புரிந்துக் கொண்டு புகாரில் கொண்டுவரவேண்டும்
முடிவாக கடைசி பாராவில் உங்கள் கோரிக்கை இருக்க வேண்டும் 
காவல் நிலையத்தில் புகார் மனு ( மாதிரிக்காக ஒரு மனு கொடுத்த பின்னர் நடவடிக்கை இல்லையென்றால் மாவட்டமாக இருப்பின் காவல் கண்காணிபாளர் அல்லது மாநகரமாக இருப்பின் காவல் ஆனையாளர் வசம் U/S 154 (3) Cr.P.C. –ன் கீழ் புகார் மனு பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் கூடிய அஞ்சலில் அனுப்பிய பிறகு ஒப்புகை அட்டை கிடைக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்தை நாடி பிரிவு U/S 156(3) Cr.P.C. –ன் கீழ் எப்.ஐ.ஆர் போட உத்திரவு பெறலாம்


நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யும் தனி முறையீட்டு புகார் மனுவுகு நீதிமன்றத்துக்கு செலுத்த வேண்டிய நீதிமன்ற கட்டணம் ரூ 5 மட்டுமே
ஓட்டு மொத்தமாக தட்டச்சு செலவு,தபால் ஸ்டாம்ப் செலவு உட்பட ரூ 200 முதல் 250 க்குள் ஆகலாம் 

(As per Schedule-II Art 11 (f) of Tamil Nadu Court-fees
and Suits Valuation Act, 1955)
(f) A written complaint or charge of any offence
presented to any Criminal Court and an oral complaint
of any such offence reduced to writing under the Code
of Criminal Procedure, 1973. Five rupees.


காவல்நிலையத்தில் CSR பெற என்ன செய்ய வேண்டும்?


காவல்துறையினர் வழங்குகின்ற ஒப்புதல் சீட்டே புகார் மனு ஏற்புச் சான்றிதழ்
காவல்துறையினர் வழங்குகின்ற ஒப்புதல் சீட்டே புகார் மனு ஏற்புச் சான்றிதழ் :

இந்திய தண்டணைச் சட்டங்களிலுள்ள (சில) பிரிவுகளின்படி தண்டிப்பதற்கான குற்றம் ஏதாவது நடந்து இருந்தாலும், அல்லது நடக்கப் போவதை அறிந்தாலும் பொதுமக்களாகிய நாம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) பிரிவு 39ல் குறிப்பிடப் பட்டுள்ளது. 

ஆனால், பொதுமக்களாகிய நாம் நமக்கு சம்பந்தம் இருந்தால் மட்டுமே அல்லது நமக்கு துன்பம் நேர்ந்தால் மட்டுமே  போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து வருகின்றோம். இது மிகவும் தவறு.

எந்தத் தவறு நடந்து இருந்தாலும் முதலில் போலீஸ் ஸ்டேஷனில்தான் புகார் அளிக்க வேண்டும் என்று நம் நாட்டில் சட்டம் வகுத்தவர்கள் ஒரு மரபை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நீங்கள் நேரடியாக சென்று புகார் அளித்தாலும், அந்தப் புகாரை பற்றி விசாரணை செய்யச் சொல்லி லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கே அவர் அனுப்பி வைப்பார்.

நீங்கள் நேரடியாக கோர்ட்டுக்கே சென்றால் கூட, அந்தப் புகார் பற்றி விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி,  அந்தப் புகாரானது நீதிமன்றத்தால் காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆகவே, முதலிலேயே நாம் அருகிலுள்ள காவல்துறை அலுவலகத்தில் புகார் அளிப்பது நல்லது. 

 நாம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும்போது அந்தப் புகாரை ஏற்றுக் கொண்டதாக காவல்துறையினர் வழங்குகின்ற ஒப்புதல் சீட்டே புகார் மனு ஏற்புச் சான்றிதழ் (CSR - Community Service Register)  என்று அழைக்கப்படுகிறது. 

எந்த ஒரு புகாராக இருந்தாலும் அதனை பதிவுசெய்து அந்தப்புகாரை தந்தவர்களுக்கு புகார் மனு ஏற்புச் சான்றிதழ் தருவது காவல்துறையினரின் கடமை ஆகும். 

மேலும், புகார் மனு ஏற்புச் சான்றிதழ் அளித்தது பற்றி அது பற்றிய குறிப்புடன் காவல்நிலையத்தில் வைத்து பராமரித்து வருகின்ற பதிவேட்டில் பதிவு செய்யவும் வேண்டும்.

அந்தப் புகாரின்படி விசாரணை செய்து, கைது செய்யப்படக்கூடிய குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், முதல் தகவல் அறிக்கை தயார் செய்து, குற்ற விசாரணை முறைச் சட்டம்,  (Cr.P.C) 1973 - பிரிவு 154ன்படி குற்றவாளிகளை கைது செய்து  நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். 

புகார் அளித்தவர்க்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்க வேண்டும்.

ஒரு வேளை  கைது செய்ய முடியாத குற்றம் ஒன்று நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், , குற்ற விசாரணை முறைச் சட்டம், 1973 -  (Cr.P.C) பிரிவு -155ன்படி புகாரையும், புகார் தந்தவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். 

ஆன்லைன் மூலமாகவும் புகார் செய்து புகார் மனு ஏற்புச் சான்றிதழ் பெற முடியும். ஆனால், நேரில் செல்வதே சிறந்தது.

புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்தாலோ அல்லது புகார் மனு ஏற்புச் சான்றிதழ் தர மறுத்தாலோ உங்கள் புகாரை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத்தபாலில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து புகார் செய்யப்பட்டதற்கான  ஒரு ஆதாரத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.

எச்சரிக்கை:

பொய்யான புகாரைக் கொடுத்தால், புகார் கொடுத்தவர் இந்திய தண்டணைச் சட்ட்ம், பிரிவு - 211ன்படி இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டணை மற்றும் அபராதம் விதித்து தண்டிக்கப்படுவார்.



No comments:

Post a Comment