வழக்கறிஞர் உதவி இல்லாமல் தனி புகார் வழக்கு வெற்றிகரமாக நடத்த வழி



வழக்கறிஞர் உதவி இல்லாமல் தனி புகார் வழக்கு வெற்றிகரமாக நடத்த வழி
வழக்கறிஞர் உதவி இல்லாமல் தனி புகார் க்கு வெற்றிகரமாக நடத்த வழி



காவல்
நிலையத்தில் கொடுத்த புகார் மனு மீது காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் (வழக்கு) பதிவு செய்ய மறுத்தால் நீதிமன்றத்தை அனுகி எப்.ஐ.ஆர் (வழக்கு) பதிவு செய்யலாம். நீதிமன்றத்தில் காவல் துறை மூலம் அல்லாமல் பாதிகப்பட்டவரே நேரடியாக தாக்கல் செய்யும் புகார் மனுவை தனி முறையீட்டு மனு அல்லது தனி முறையீட்டு வழக்கு என்பார்கள்

பாதிக்கப்பட்ட நபர் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாக புகார் மனுவை உரிய காவல் நிலையத்தில் கொடுத்து (எப்.ஐ.ஆர்) வழக்கு பதிய சொல்லி வலியுறுத்தலாம்

வழக்கினை பதிவு செய்ய (வழக்கினை விசாரனைக்கு ஏற்க) மறுத்தால் அல்லது காலம் தாழ்த்தினால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (அ) காவல் ஆணையளாரிடம் குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 154 (3) -ல் புகார் மனுவை எழுத்து மூலமாக கொடுக்க வேண்டும்

பிறகு உரிய குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 200-ல் தனி புகார் ஒன்றினை கொடுத்து குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 156 (3) படி எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்திரவு பெறலாம்.

அல்லது நேரடியாக உயர் நீதிமன்றத்தையும் அனுகி எப்.ஐ.ஆர் போட உத்திரவும் பெறலாம்

நீதிமன்ற உத்திரவுக்கு பிறகு வேறு வழியில்லாமல் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்வார்கள் எப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு காவல் துறையினர் விசாரனை செய்து வழக்கில் போதுமான ஆதாரம் இருப்பின் குற்றபத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்

பிரிவு 200-ல் நீதிமன்றமே நேரடியாக வழக்கினை விசாரனை செய்யும் வழி முறை உள்ளது.  அதை பிறகு தனியாக பார்ப்போம்
பொதுவாக பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையிடம் தான் கொடுக்கும் மனுவை புகார் மனு என்று நினைக்கின்றோம் ஆனால் சட்டபடி காவல் துறைக்கு பாதிக்கப்பட்ட நபர் கொடுக்கும்தகவல் தான் அது முதலில் கிடைக்கும் தகவலை காவல் துறை முதல் தகவல் அறிக்கையாக (எப்.ஐ.ஆர்) பதிவு செய்து கொண்டு வழக்கினை புலன் விசாரனைக்கு எடுத்துக் கொள்கின்றார்கள் எந்த ஒரு வழக்கிற்கும் அடிப்படை முதல் ஆவணம் இந்த முதல் தகவல் (புகார்) என்ற வகையில் குற்றவாளையை தண்டிக்க மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

குற்ற நிகழ்வால் பாதிக்கப்பட்ட நபர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பினை பற்றி வாய்மொழியாக அல்லது எழுத்து மூலமாக புகாரை காவல் நிலையத்தில் கொடுக்கலாம் வாய்மொழியாக கொடுத்தால் அதை காவல்துறையினர் எழுத்து மூலமாக எழுதி பதிவுசெய்து படித்துக்காட்டி விளக்குவார்கள் ??? (பிரிவு 154 (1) சிஆர்பிசி) வாய்மொழியாந புகாரை பதிவு செய்துக் கொண்டு அல்லது எழுத்து மூலமான புகாராக இருப்பின் பெற்றுக் கொண்டு கைது செய்ய கூடிய குற்ற செயல் நடைபெற்றதாக அதில் கண்டால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வார்கள். கைது செய்ய கூடிய குற்ற செயல் அல்லாத குற்றம் என்றால் மனு இரசீது (சிஎஸ்ஆர்) (பிரிவு 155 (1) சிஆர்பிசி)வழங்குவார்கள்

புகார் மனுவில் என்ன என்ன விபரங்கள் இருக்க வேண்டும் மாதிரியுடன் தனிப்பதிவில்


புகார் மனுவில் புகார் கொடுப்பவர் பெயர் தகப்பனார் பெயர் வயது முழு முகவரி செல் எண் உள்ளிட்ட முழு விபரம் அனுப்புநர் பகுதியில் எழுத வேண்டும் 

பெறுதல் பகுதியில் அந்த காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் யார் பொறுப்போ அவர் பதவியிட்டு குறிப்பிட வேண்டும் அவரின் பெயரை குறிப்பிட கூடாது 

அடுத்த புகார் மனுவில் முன்னுரை சுருக்கமாக குற்ற செயலுக்கும் முன்பாக (மோடிவ்) உங்களுக்கும் எதிர் தரப்புக்கும் உள்ள உறவு பற்றி சுறுக்கமாக குறிப்பிடலாம்
அடுத்து குற்றம் நடைபெற்ற தேதி நேரம் இடம் தெளிவாக குறிப்பிட்டு குற்ற சம்பத்தை விரிவாக நடந்ததை அப்படியே எழுத்தில் விவரிக்க வேண்டும்

சம்பவத்தை பற்றி விவரிக்கும் போது அந்த குற்ற சம்பவத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை குற்ற பிரிவு வரும் விசயங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும் 
எடுத்துக்காட்டு 
என்னை தடுத்து நிறுத்தி ..... (இதச பிரிவு 341)
கொச்சையாக திட்டினார் ..... (இதச பிரிவு 294 பி)
வார்த்தையை அப்படியே பச்சையாக சொன்னது சொல்லியபடி எழுத வேண்டும்

ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கியத்துவம், பலம், பலவீணம் இருக்கும் அதை புரிந்துக் கொண்டு புகாரில் கொண்டுவரவேண்டும்
முடிவாக கடைசி பாராவில் உங்கள் கோரிக்கை இருக்க வேண்டும் 

காவல் நிலையத்தில் புகார் மனு ( மாதிரிக்காக ஒரு மனு கொடுத்த பின்னர் நடவடிக்கை இல்லையென்றால் மாவட்டமாக இருப்பின் காவல் கண்காணிபாளர் அல்லது மாநகரமாக இருப்பின் காவல் ஆனையாளர் வசம் U/S 154 (3) Cr.P.C. –ன் கீழ் புகார் மனு பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் கூடிய அஞ்சலில் அனுப்பிய பிறகு ஒப்புகை அட்டை கிடைக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்தை நாடி பிரிவு U/S 156(3) Cr.P.C. –ன் கீழ் எப்.ஐ.ஆர் போட உத்திரவு பெறலாம்


நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யும் தனி முறையீட்டு புகார் மனுவுகு நீதிமன்றத்துக்கு செலுத்த வேண்டிய நீதிமன்ற கட்டணம் ரூ 5 மட்டுமே
ஓட்டு மொத்தமாக தட்டச்சு செலவு,தபால் ஸ்டாம்ப் செலவு உட்பட ரூ 200 முதல் 250 க்குள் ஆகலாம் 

(As per Schedule-II Art 11 (f) of Tamil Nadu Court-fees
and Suits Valuation Act, 1955)
(f) A written complaint or charge of any offence
presented to any Criminal Court and an oral complaint
of any such offence reduced to writing under the Code
of Criminal Procedure, 1973. Five rupees.

No comments:

Post a Comment